வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 21 ஜூலை 2021 (11:47 IST)

நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்... நயன்தாராவுக்கு சவால் கொடுக்கும் ஹன்சிகா!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி . குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் குட்டி குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. 
 
இதனால் உடல் எடை குறைத்து ஸ்லிம் ஹீரோயினாக மாறினார். தொடர்ந்து நல்ல கதை கொண்ட படமாக நடிக்க காத்திருக்கும் ஹன்சிகாவுக்கு சரியான வாய்ப்புகளே கிடைக்கவில்லையாம். கொஞ்சம் நாளாக பார்ட் டைம் வேலையாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வந்தார். ஆனால், அதுவும் கைகொடுக்கவில்லை. 
 
இருந்தும் அம்மணி மனம் தளராமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடிப்பேன் என ஒற்றை காலில் நின்றுக்கொண்டிருக்கிறாராம். நயன்தாரா, த்ரிஷாவையெல்லாம் பார்த்து தான் அம்மணிக்கு இப்படி ஒரு ஆசை வந்துள்ளதாம். நயன்தாராவிடம் இருப்பது அப்படி என்ன என்கிட்ட இல்ல? என எகிறுகிறாராம் அம்மணி.