திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (19:48 IST)

10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தனுஷுடன் இணையும் ஹன்சிகா!

கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ஹன்சிகா தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் D44. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மூன்று நாயகிகள் என செய்திகள் வெளியானது. அவர்கள் நித்யாமேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ஹன்சிகா என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இதில் நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் தனுஷுடன் முதல்முறையாக நடிக்க உள்ளனர் என்பதும் ஹன்சிகா பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தனுஷுடன் இணைய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் அவரும் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அதனுடன் இணைய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது