வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (08:13 IST)

நான்கு நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலித்ததா விஜய்யின் கோட் திரைப்படம்?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

முதல் காட்சி ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்று வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நேற்று படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் தருணங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கும் நிலையில் கேரளா, ஆந்திரா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

முதல் நாளில் இந்த படம் 126 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் கலவையான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்கள் வசூல் குறைந்தது. இந்நிலையில் முதல் வார நான்கு நாட்களில் கோட் படம் மொத்தமாக 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.