செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (17:42 IST)

’குட்டி ஸ்டோரி’ தெரியும், அது என்ன ‘குட்டி லவ் ஸ்டோரி”: கெளதம் மேனன் வெளியிட்ட வீடியோ

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு இல்லாமல் இருந்த பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் ஓடிடி பக்கம் மெல்ல மெல்ல சாய ஆரம்பித்தார்கள் என்பது தெரிந்ததே. பிரபல நடிகர்களும் நடிகைகளும் இயக்குனர்களும் ஓடிடி படங்களில் பணிபுரிந்து வந்தனர் என்பதும் அவற்றின் படப்பிடிப்பில் சத்தமில்லாமல் நடந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் 4 முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு மற்றும் நலன் குமாரசாமி ஆகிய நால்வரும் இணைந்து ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளனர் 
 
‘குட்டி லவ் ஸ்டோரி’ என்ற டைட்டில் கொண்ட இந்த திரைப்படத்தில் நான்கு கதைகள் இருக்கும் என்பதும் நான்கையும் நான்கு இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புரோமோ வீடியோ ஒன்றை கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆந்தாலஜி திரைப்படம் மிக விரைவில் ஓடிடி பிளாட்பாரத்தில் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது