வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (16:35 IST)

’’ மாஸ்டர் ‘’பட நடிகரின் படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது…

மாநகரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதிபதியும், கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்திலும் அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியானது. இதையடுத்து அட்லியின் தயாரிப்பில் அந்தகாரம் என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ஓடிடியில் இம்மாதம் ரிலீசாகவுள்ளதாகவும் முறையாக அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.