பாலாவின் "வர்மா" ஓடிடியில் வெளியாகிறதா? - தயாரிப்பாளர் அதிரடி பதில்!
பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா படத்தினை அமேசான் ப்ரைம் தளத்தில் ஆயுத பூஜைக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் பாலா தன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது நடிக்க அழைக்க மாட்டாரா என நடிகர்கள் ஏங்கினர்.
அந்த அளவுக்கு அவர் படங்களில் நடிகர்களை சிறப்பாக கையாண்டு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடிக்க வைப்பார். விக்ரம், சூர்யா, சங்கீதா, ஆர்யா மற்றும் அதர்வா போன்ற நடிகர்களை ஸ்டாராட்டாக்கியக்கியதே பாலாவின் படங்கள்தான்.
ஆனால் இப்போது நிலைமை வேறு கடைசியாக அவர் இயக்கிய படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதுவும் தனது நண்பரின் மகன் துருவ் விக்ரமை கதாநாயகனாக்கி அவர் எடுத்த வர்மா திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காததால் கிடப்பில் போடப்பட்டு வேறு ஒரு இயக்குனரால் எடுக்கப்பட்டது பாலாவுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது.
ஆனால், மறுபடியும் எடுத்த ஆதித்ய வர்மாவும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பாலா இயக்கிய வர்மாவை அமேசான் நிறுவனம் வாங்கி ஆயுதபூஜை அன்று ரிலிஸ் செய்ய உள்ளதாக சொல்லப்பட்டது. தற்ப்போது இது குறித்து பதிலளித்துள்ள தயாரிப்பாளர் முகேஷ் ரட்டிலால் மேத்தா, இது முற்றிலும் பொய்யானது. வதந்திகளை நம்ப வேண்டாம் என பதில் அளித்துள்ளார்.