புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:10 IST)

தனுஷால் ’ஜகமே தந்திரம்’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்? அதிர்ச்சியில் தயாரிப்பாளர்

கொரனோ வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாததால் முக்கிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய அறிவிப்பு வெளியானதை அடுத்து தற்போது தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படமும் ஓடிடியில் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது 
 
முதலில் ஜகமே தந்திரம் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பச்சைக்கொடி காட்டிய தனுஷ் தற்போது திடீரென முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது. ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும் திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீஸ் செய்யுங்கள் என்றும் தயாரிப்பாளரிடம் தனுஷ் நெருக்கடி கொடுத்ததாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது
 
மேலும் தயாரிப்பாளர் எதிர்பார்த்த தொகையை ஓடிடி நிறுவனத்தினர் தர மறுப்பதாகவும், அதுமட்டுமின்றி ஓடிடியில் ரிலீஸ் செய்தால் இங்கிலாந்து அரசு தரும் ரூபாய் 10 கோடி மானியம் கிடைக்காது என்றும் தனுஷ் முட்டுக்கட்டை போடுவதாலும், இந்த படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது 
 
மேலும் இன்று முதல் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த தமிழக அரசு விரைவில் திரையரங்குகள் திறக்கவும் அனுமதி அளிக்கும் என்றும் அதனால் ஒரு மாதம் பொறுத்திருந்து தியேட்டர்களில் ரிலீஸ் செய்யலாம் என்றும் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது