வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 ஆகஸ்ட் 2018 (20:36 IST)

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் கோலிவுட் திரையுலகில் உருவாகவுள்ளதாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் விஜய் எழுதி வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி வெளிவந்துள்ளது. இவர் அஜித் நடித்த 'கிரீடம்' முதல் சாய்பல்லவி நடித்த 'தியா' வரை பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
திரைக்கதை அமைக்கும் பணி முடிந்தவுடன் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் நடிகை குறித்து இயக்குனர் விஜய் முடிவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த கேரக்டரில் நடிக்க த்ரிஷா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்பட முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் பாதி அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்து இரண்டாம் பாதி அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.