அரவிந்தசாமி, அருண்விஜய்யை அடுத்து விஜய்சேதுபதியின் ஃபர்ஸ்ட்லுக்
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் முதல்முறையாக நான்கு முன்னணி நடிகர்கள், மூன்று முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர். இவர்களில் அரவிந்தசாமி, அருண்விஜய் ஆகியோர்களின் ஃபர்ஸ்ட்லுக் தோற்றங்கள் மற்றும் அவர்களுடைய கேரக்டர்களின் பெயர்கள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்த நிலையில் சற்றுமுன் விஜய்சேதுபதியின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்துள்ளது.
விஜய்சேதுபதி இந்த படத்தில் ரசூல் என்ற கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அரவிந்தசாமி 'வர்தன்' என்ற கேரக்டரிலும், அருண்விஜய், 'தியாகு' என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை சிம்புவின் கேரக்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.