வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (15:26 IST)

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முன் பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்க முடியாது; அமைச்சர் ஜெயக்குமார்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முன்னாள் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நேற்று திரைத்துறையினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய ரஜினி பொங்கிவிட்டார்.
 
கருணாநிதியின் இறுதி சடங்கில் முதல்வர் கலந்துக்கொள்ளாதது குறித்து விமர்சனம் செய்தார். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ரஜினியின் கருத்துக்கு பதிலளித்த ஜெயக்குமார் கூறியதாவது:-
 
கருணாநிதியால்தான் அதிமுக உருவானது என்ற தவறான கருத்தை ரஜினி கூறியுள்ளார். இதுபோல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசுவதற்கு தைரியம் இல்லை. ஓடி ஒளிந்துக்கொண்டார். அவர்கள் முன் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.