1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (08:00 IST)

ராயன் படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் சார் உடனே ஒத்துக் கொள்ளவில்லை… காரணம் இதுதான் – தனுஷ் பேச்சு

தனுஷ், தனது 50 ஆவது படமான ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், ராயன் படத்துக்குள் ரஹ்மான் வந்ததைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் “என்னுடைய 50 ஆவது படத்தில் நீங்கள் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன் என ரஹ்மான் சாருக்கு மெஸேஜ் அனுப்பினேன். அவர் இரண்டு நாட்களில் சொல்கிறேன் எனக் கூறினார். இரண்டு நாட்கள் கழித்து அழைத்த அவர் “ தனுஷ், நான் இப்போது 30 படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்த படத்துக்கு ‘எஸ்’ சொல்வது கடினமானது. ஆனால் நான் ‘எஸ்’ சொல்கிறேன்’ என்றார்.அவருக்கு நன்றி. அவரால் எப்படி இவ்வளவு காலமும் நிலைக்க முடிகிறது என்று பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன்” எனக் கூறியுள்ளார்.