ரசிகர்களை நெளிய வைக்கப் போகிறதா இந்தியன் 2… ரன் டைம் இவ்ளோ நேரமா?
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் சென்சார் நடந்து முடிந்துள்ளது. அதன்படி படத்தின் ஓடுநேரம் 3 மணிநேரம் 4 நிமிடம் ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.