1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (16:20 IST)

தனுஷின் ராயன் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இதையடுத்து இந்த திரைப்படம் ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதற்கானக் காரணங்கள் தெரியவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ஜூலை 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் ஜூலை 6 ஆம் தேதி இந்த படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.