வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (22:18 IST)

கார்த்தி படத்தில் தனுஷ் பட நடிகை...ஹீரோவுக்கு இணையான கேரக்டர்

சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்த நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படம் சர்தார்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.  இப்படத்தில்   கார்த்திக் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒன்று போலீஸ் கேரக்டர் என்றும், இன்னொன்று விஞ்ஞானி கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.
 பிஎஸ் மித்ரன் இயக்கும் இந்தப் படம் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட கிரைம் சப்ஜெக்ட் என்றும் இந்தப் படம் இதுவரை தமிழில் வெளிவராத கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது

சிறுத்தை மற்றும் காஷ்மோரா ஆகிய திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கார்த்தி மீண்டும் மூன்றாவது முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் ஏற்கனவே இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் இன்னும் மூன்று பாடல்களை அவர் கம்போஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கும் இந்த படத்தில் ரஜிஷா விஜயன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ரஜிஷா விஜயன் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் பிரபல நடிகையான அவருக்கு தமிழில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதால்,  அவருக்கு கார்த்தி படத்திலும் நல்ல கதாப்பாத்திரம் இருக்குமெனக் கூறப்படுகிறது.