திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 13 ஜனவரி 2020 (19:05 IST)

என்னைய நம்பி சிவசாமிய கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.. தனுஷ் நெகிழ்ச்சி

அசுரன் திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து சிவசாமி கதாப்பாத்திரத்தை கொடுத்ததற்கு நன்றி என தனுஷ் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் அசுரன். இத்திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இத்திரைப்படத்திற்காக வெற்றி மாறனுக்கு ஆனந்த விகடனின் சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. அதே போல் இத்திரைப்படத்திற்காக தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான ஆனந்த விகடன் விருது கிடைத்தது.

இந்நிலையில் அசுரன் திரைப்படத்தின் 100 ஆவது நாள் வெற்றி விழாவில் பேசிய நடிகர் தனுஷ், ”அசுரன் திரைப்படத்தில் சிவசாமியாக சரியாக செய்வேன் என நம்பிக்கை வைத்ததற்கு வெற்றி மாறனுக்கு நன்றி. அசுரன் பட வெற்றி எல்லாருக்கும் சமம் தான். யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: என கூறியுள்ளார்.

மேலும், “அசுரன் படம் வெளியாகும்போது நான் இங்கு இல்லை. அம்மா தான் படம் எல்லாருக்கு பிடிச்சுருக்குன்னு ஃபோன் பண்ணி சொன்னாங்க. நான் பக்கத்தில இல்லயேன்னு வருத்தப்பட்டாங்க. ஆனால் கடவுளுக்கு தெரியும். நம்மல் எங்க எப்படி வைக்கனும்ன்னு. வெற்றியை தூரமா நின்னு ரசிக்கனும்” என கூறியுள்ளார்.