அகிலம் வென்ற "அசுரன்" - 100ம் நாள் வெற்றி கொண்டாட்டம்!

papiksha| Last Updated: சனி, 11 ஜனவரி 2020 (12:49 IST)
வடசென்னை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளிவந்து வெற்றிநடை போட்டு வரும் படம் அசுரன் இன்று 100வது நாளில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. 
 
பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிய இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாராட்டு மழையில் நனைந்த அசுரன்  விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை  பெற்று வருகிறது. சிவ சுவாமி கதாபத்திரத்தில் தனுஷின் நடிப்பும் அவரது மனைவியாக மஞ்சு வாரியாரின் நடிப்பும்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஈர்த்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. காதல் , பாசம் குடும்பம் , இறப்பு , சாதி கொடுமை , அதிகாரம் , அபகரிப்பு என அத்தனையும் உள்ளடக்கி வெளிவந்த இப்படம் ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துவிட்டது. 
 
இந்நிலையில் இன்று  இப்படம் வெற்றிகரமான 100வது அடியெடுத்து வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனை தனுஷின் ரசிகர்கள்  #Asuran100Days என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :