இயக்குனர் ஆகிறார் யுவன்: முதல் படத்தின் நாயகன் யார் தெரியுமா?
இசையமைப்பாளர், தயாரிப்பாளர் அவதாரங்களில் ஜொலித்து வந்த யுவன்ஷங்கர் ராஜா விரைவில் இயக்குனராகிறார். அதுகுறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்
கடந்த சில வருடங்களாக சச்சின் தோனி முதல் பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இன்னொரு பிரபலமான இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது
இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இயக்குனராகிறார். இந்த தகவலை நேற்று அவர் ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட போது தெரிவித்தார். மேலும் இளையராஜா கேரக்டரில் நடிக்க பல நடிகர்களை தான் பரிசீலனை செய்ததாகவும் கடைசியில் தனுஷ் தான் அந்த வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். யுவன் இதனை கூறும்போது தனுஷ் அருகில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இயக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்