தனுஷின் அடுத்த படத்தில் அக்ஷய்குமார்: புதிய தகவல்
தனுஷ் நடித்து வரும் கர்ணன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் நெல்லை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி அவர் நடித்து முடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிக்கவிருக்கும் படம் உள்பட 3 படங்களில் நடிக்க தனுஷ் கமிட் ஆகியுள்ள நிலையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்
இந்த படத்தில் தனுசுடன் அக்சய்குமார் மற்றும் சாரா அலிகான் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
ரஜினியுடன் 2.0 என்ற படத்தில் நடித்த அக்சய்குமார் தற்போது மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் தனுசுடன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது