திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (16:25 IST)

இவ்வளவு கோரமான காயமா... டேனி வெளியிட்ட பிக்பாஸ் மதுமிதாவின் புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதாவின் புகைப்படம் ஒன்றை டானி வெளியிட்டுள்ளார். 
 
கடந்த ஜூன் 23 ஆம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக நிக்ழ்ச்சியில் பங்கேற்றவர் காமெடி நடிகையான மதுமிதா.  
 
இந்நிகழ்ச்சியில் ஹெலோ ஆப்பின் சார்பில் டாஸ்ட் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது மதுமிதா மழை குறித்து பேசியதால் சக போட்டியார்கள், பிக்பாஸை அரசியலாக்குவதாக கூறி வாக்குவாதம் செய்தனர். 
எனவே தனது கருத்து உண்மையானது உணர்வு பூர்வமானது என நிரூபிக்க தனது கையை அறுத்துக்கொண்டார் மதுமிதா. இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார். 
 
இதன் பின்னர் பேட்டி ஏதும் கொடுக்காமல் இருந்த அவர் நேற்று செய்தியாளர்களுக்கு வீட்டில் தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர் டேனி, மதுமிதாவின் புகைப்படம் ஒன்றை வெளியிடுள்ளார். 
ஆம், மதுமிதாவின் காயத்தைதான் டேனி புகைப்படமாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.