1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (13:25 IST)

தலைவி ஆனதும் வேலையை காட்டும் லொஸ்லியா - வெளுத்து வாங்கிய சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வீடியோவில் லொஸ்லியா மற்றும் கவினுக்கும் இடையில் பிரச்னை ஆரம்பித்துள்ளது. 


 
இந்த வாரத்தின் தலைவியான லொஸ்லியா, கார்ட்ன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் சாண்டி, தர்ஷன் , முகன், கவின் உள்ளிட்டோரை " காஃபி குடிச்சு முடிச்சாச்சுல வாங்க போய் வேலை செய்வோம் என்று கூறி அழைக்கிறார். 
 
அதற்கு சாண்டி " நீங்க கேப்டனாக இருக்கும்போது மட்டும் வா ஒடனே போல வேலை செய்யலாம் என்று சொல்லுறீங்க இதே மற்றவர்கள் கேப்டனாக இருக்கும் போது நீங்கள் இப்படி பொறுப்பாக இருந்திருக்கிறீர்களா? என கேள்வி கேட்கிறார். அதற்கு கடுப்பான லொஸ்லியா  எஸ்கியூஸ்மீ நான் உங்கள கூப்பிடல என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்கிறார். 
 
பிறகு இந்த விஷயத்தில் கவினுக்கு சாண்டி மீது கோபம் வருகிறது " நீ ஜாலி ஜாலின்னு சொல்லிட்டு கஷ்டப்படுத்துற என்று கூறுகிறார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் " மற்றவர்களை கலாய்த்து கிண்டலடித்த போது அவர்களுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்..உங்களுக்கு வந்தால் ரத்தம் இதே அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா என கேட்டு கிண்டலடித்து வருகின்றனர்.