வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (14:18 IST)

விவகாரமான உள்ளாடை: அஜித் டயலாக் பேசி மதுவின் வாயடைத்த அபிராமி!

நடிகை மதுமிதா நேற்று வழங்கிய பேட்டியில் கூறி இருந்த சில புகார்களுக்கு அபிராமி பதில் அளித்துள்ளார். 
 
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்த மது தனது கருத்தை வெளிப்படுத்த கையை அறுத்துக்கொண்டார். இது நிகழ்ச்சியின் விதிகளை மீறுவதாக உள்ளதாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 
 
அதனை தொடர்ந்து கையை அருத்துக்கொள்ளும் படி என்ன நடந்தது என்பதையும் தனக்கு நடந்த சில மோசமான நிகழ்வுகளையும் மதுமிதா நேற்று செய்தியாளர்களின் சந்திப்பில் பகிர்ந்துக்கொண்டார். அப்போது, அவர் மற்ற போட்டியாளர்களின் நடவடிக்கைகளை பற்றியும் தெரிவித்தார். 
குறிப்பாக, ஒரு பெண் முதல் நாளிலிருந்தே மாலை நேரம் ஆகிவிட்டால் உள்ளாடை போடாமல் ட்ரான்ஸ்பிரன்ட் ஆடை அணிந்துகொண்டு சுற்றுகிறாள். இதை நானும் வானிதாவும் கூப்பிட்டு கண்டிக்கிறோம், ஆனாலும் அதை அவள் கேட்கவில்லை என கூறியிருந்தார். 
 
மதுவின் இந்த பேச்சுக்கு எவிக்ட் செய்யப்பட்ட சக போட்டியாளரான அபிராமி பதில் அளித்துள்ளார். அபிராமி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், யாராவது இவர்களுக்கு நேர்கொண்ட பார்வை படத்தின் டிக்கெட்டுகளை அனுப்பி வைய்யுங்கள். 
உங்களிடம் ஒரு கேள்வி, (நீங்கள் சக போட்டியாளர்களின் ஆடை பற்றி விமர்சித்ததற்கு) உங்களை உயர்த்தி காமிக்க மத்தவங்களை என் அசிங்க படுத்துறீங்க? என பதிவிட்டுள்ளார். 
 
அபிராமியின் இந்த பதிவு நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் பேசும் ஒரு வசனத்துடன் ஏறத்தாழ ஒத்து போகிறது. பார்ப்போம் மது இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று...