செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஜூலை 2021 (11:19 IST)

தனுஷ் 43 படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் – ஐதராபாத்தின் இன்று தொடக்கம்

ஹாலிவுட் படப்பிடிப்பு முடிந்து இந்தியா திரும்பிய தனுஷ் இன்று முதல் டி43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய ரஸோ பிரதர்ஸ் இயக்கும் தி க்ரே மேன் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமானார். அதை தொடர்ந்து சில மாதங்கள் முன்னர் அமெரிக்கா சென்ற தனுஷ் தொடர்ந்து க்ரேமேன் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார்.

ஹாலிவுட் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இந்தியா திரும்பிய தனுஷ் அடுத்தக்கட்டமாக கார்த்தி நரேன் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இன்று முதல் ஈடுபடுகிறார். டி43 என்ற பெயரிடப்படாத படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் இன்று ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.