செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 21 ஜூன் 2018 (19:43 IST)

கேங்ஸ்டர் படம் இயக்கும் சி.வி.குமார்

சி.வி.குமார் இயக்கும் படம், கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

 
தயாரிப்பாளரான சி.வி.குமார், ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2014ஆம் ஆண்டே இந்தப் படத்துக்கான வேலைகள் தொடங்கினாலும், கடந்த ஆண்டுதான் படம் ரிலீஸானது. சயின்ஸ் பிக்‌ஷன் திரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில், சந்தீப் கிஷண் ஹீரோவாக நடித்திருந்தார். லாவண்யா திரிபாதி ஹீரோயினாக நடிக்க, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, கேங்ஸ்டர் கதையைக் கையில் எடுத்துள்ளார் சி.வி.குமார். அதுவும் பெண் கேங்ஸ்டரைப் பற்றிய படம். ‘கேங்ஸ்டர் ஆப் மெட்ராஸ்’ என்றே படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளனர். புதுமுக நடிகை ஒருவர் பிரதான பாத்திரத்தில் நடிக்க, சி.வி.குமார் தயாரிப்பில் இதுவரை நடித்த ஹீரோக்கள் சிலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஹரி தபுசியா இசையமைக்கிறார்.