யோ - யோ டெஸ்ட் தேர்ச்சி: விமர்சனங்களுக்கு ரோகித் சர்மா பதிலடி!
வீரர்களுக்கான நவீன உடற்தகுதி சோதனையான யோ-யோ டெஸ்ட்டில் ரோஹித் சர்மா தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால், இவர் எப்படி தேர்ச்சி பெற்றார் என பல விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு இவர் தற்போது பதில் அளித்துள்ளார்.
ராயுடு, ஷமி, சஞ்சு சாம்சன் ஆகியோர் யோ-யோவினால் இந்திய அணியில் தேர்வாகும் வாய்ப்பினை பரிகொடுத்தனர். இதனால் யோ யோ டெஸ்டில் மாசடி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் ரோஹித் சர்மா யோ-யோ டெஸ்டில் தேறியதையடுத்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், நான் எங்கு எப்படி என் நேரத்தைச் செலவழிக்கிறேன் என்பது பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், அவரவர்கள் தங்கள் வேலையைப் பார்ப்பது நல்லது. வழிமுறைகளை பின்பற்றும் வரையில் நான் என் நேரத்தை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்க உரிமை படைத்தவன்.
நாம் உண்மையான செய்திகளை விவாதிப்போம், சில சேனல்களுக்குக் கூறுகிறேன், யோ-யோ டெஸ்ட்டில் ஒரே வாய்ப்புதான் பெற்றேன், அது புதனன்று அதில் தேறிவிட்டேன். ஒரு செய்தியை வெளியிடும் முன் சரிபார்ப்பது நல்லது என கூறியுள்ளார்.