வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (12:55 IST)

பண்டாரத்தி புராண பாடல் வழக்கு… தனுஷ் மற்றும் தேவாவுக்கு நோட்டீஸ்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் படத்தின் பாடல் சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தனுஷ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில் கர்ணன் படத்தில் இடம்பெறும் பண்டாரத்தி பாடல் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அந்த பாடலை படத்திலிருந்து நீக்காவிட்டால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஏற்று விசாரிக்கும் நீதிமன்றம் தனுஷ், பாடலை பாடிய தேவா, ஆகியோருக்கு இப்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.