புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (11:58 IST)

தனுஷ் விருது வாங்கியதில் என் பங்கு இல்லை… வெற்றிமாறன் பெருந்தன்மை!

அசுரன் படத்துக்காக தேசிய விருது வாங்கியுள்ள தனுஷுக்கு வெற்றிமாறன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. அதில் தமிழில் அசுரன் திரைப்படம் சிறந்த படமாகவும், சிறந்த நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் அளித்துள்ள பேட்டியில் ‘தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததில் என் பங்கு எதுவும் இல்லை. முழுக்க முழுக்க அவரின் உழைப்புக்குக் கிடைத்ததே இந்த விருது’ என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக ஆடுகளம் படத்துக்காக தனுஷ் சிறந்த நடிகர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.