சிக்கி கொண்ட முருகதாஸ்: எஸ்கேப் ஆன விஜய்! – கத்தி பட விவகாரம்!
‘கத்தி’ திரைப்பட கதை திருட்டு விவகாரத்தில் இருந்து நடிகர் விஜய்யை வெளியேற்றியது நீதிமன்றம்.
விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய திரைப்படம் ‘கத்தி’. விவசாய மக்களின் பிரச்சினைகளை பேசும் படமாக 2014ம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படம் தன்னுடைய கதை என்று ராஜசேகர் என்பவர் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
ராஜசேகர் தொடுத்த வழக்கில் லைகா நிறுவனம், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது புகார் பதியப்பட்டது. கடந்த 5 வருடங்களாக நடந்து வரும் இந்த விசாரணையில் கதை சம்பந்தமான பிரச்சினை என்பதால் இயக்குனர் முருகதாஸை தவிர நடிகர் விஜய் மற்றும் லைகா நிறுவனத்தை மதுரை நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது.
இந்த வழக்கில் முருகதாஸ் தரப்பில் ராஜசேகரின் “தாகபூமி” மற்றும் தனது கத்தி ஆகிய இரண்டு திரைப்படங்களையும் பார்த்து ஒற்றுமை உள்ளதா என சோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.