#ThisHappened2019 ட்விட்டரில் தூள் கிளப்பிய விஜய் - ஆரவாரம் செய்யும் ரசிகர்கள்!
சமூகவலைத்தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் அதிகம் உபயோகிப்பதும் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதும் ட்விட்டரில் தான். இதில் வருடம் முழுக்க பேசப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளை ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் ட்விட்டர் நிறுவனம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் இந்த ஆண்டில் எல்லா துறையிலும் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளை குறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அளவிலான சினிமா நட்சத்திரங்களுடன் தமிழ் சினிமா பிரபலங்களுக்கும் ட்ரெண்டாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்திய அளவில் பிரபலமான ஹாஷ்டேக்களில் விஜய் 5 வது இடத்திலும் அவர் நடித்த பிகில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாது நடிகர் விஜய் பதிவிட்ட பிகில் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் இந்திய அளவில் அதிகமுறை மறுட்வீட் செய்யப்பட்டது என்ற சாதனையை பெற்றுள்ளது இதனை விஜய் ரசிகர்கள் அதிகமுறை ரீடுவீட் செய்து அடுத்த ஆண்டும் விஜய்யே இந்த சாதனையை பெற வேண்டும் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.