புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (19:46 IST)

மறக்க முடியுமா இந்த கவர்ச்சி ஏரியை? ஜெயமாலினி பிறந்த தினம் இன்று

ஜெயமாலினி தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல் மூலம் பிரபலமானார். 


 
இவர் 500க்கும் மேற்பட்ட தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜெயமாலினி 1958 டிசம்பர் 22ல் ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.
 
இவரது அக்கா ஜோதிலட்சுமி பிரபல கவர்ச்சி நடிகை ஆவார் இவர் 1970 களில் பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் 8 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் கடைசி குழந்தையாக பிறந்தவர் ஜோதிலட்சுமியின் தங்கை ஜெயமாலினி. இவரும் அக்கா வழியில் அதிரடி கவர்ச்சி காட்டி திரையுலகிற்கு வந்தார். 
 
அக்காவை மிஞ்சிய தங்கையாக, ஜெயமாலினி தனது அக்காவை விட அதிக படங்களில் நடித்துள்ளார்.
 
ராதிகா சரத்குமார் நடித்த அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் ஜோதிலட்சுமி வில்லி மாமியாராக நடித்திருந்தார். 
 
அதேபோல நடிகர் விவேக், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோருடன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜோதிலட்சுமி நடித்திருந்தார். 
 
தமிழில் அவர் நடித்த படங்கள் சில
 
அன்புக்கு நான் அடிமை
அன்னை ஓர் ஆலயம் (திரைப்படம்)
அந்த ஒரு நிமிடம் (1985)
டாக்டர். சிவா (1975)
என்னைப் பார் என் அழகைப் பார் கந்தர்வக் கன்னி
கர்ஜனை (1981)
குரு (1980)
குடும்பம் (1967 திரைப்படம்)
நாம் இருவர்.