புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (19:46 IST)

காதலரிடம் உருகிய சுருதிஹாசன்!

தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்த நடிகை சுருதிஹாசன், கடந்த ஒரு வருடமாக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் உள்ளார்.
 



லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை சுருதிஹாசன் காதலித்து வருகிறார். . சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த மைக்கேலை தாய் சரிகாவிடம்அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் மைக்கேலை திருமணம் செய்துகொள்ள கமல்ஹாசனிடம் சம்மதம் வாங்க அழைத்து வந்ததாக தகவல்கள் அப்போது வெளியாகின.
 
இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள சுருதிஹாசன் அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மைக்கேலை சந்தித்தார். இருவரும் ஜோடியாக இருக்கும் படத்தையும் சுருதிஹாசன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தின் கீழே “என்னை நீ சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறாய். இந்த உலகத்தில் இது ஒரு முக்கியமான விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.