'தொழில்நுட்ப' இசை கேட்பதை நிறுத்த வேண்டும் - இளையராஜா

Ilaya
Last Updated: சனி, 22 டிசம்பர் 2018 (19:45 IST)
சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
''நான் இசையமைத்த பாடல்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஒரே மாதிரி உள்ளன. இதில் வேறுபாடுகள் இல்லை. எல்லா பாடல்களிலும் சரிகமபதநி இருக்கும். பாடல்களுக்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது, சிந்தனையும் தேவை. நான் முதல் படத்துக்கு பெற்ற சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்.
 
பறை இசை, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய இசைகளை பாதுக்காக்க வேண்டும். தொழில்நுட்பம் பெயரில் உருவாக்கும் இசையை கேட்பதால்தான் பாரம்பரிய இசை அழிந்து வருகிறது. அதைக் கேட்பதை நிறுத்திவிட்டாலே போதுமானது. பாரம்பரிய இசை கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு இசையை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதை அழிவிலிருந்து காக்க முடியும்'' என்றார் ராஜா.

இதில் மேலும் படிக்கவும் :