வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (17:22 IST)

பிகில் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். 


 
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 


 
வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த வேளையில் படத்தில் ரிலீஸ் தேதி குறித்த வதந்திகள் பரவி விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம். படத்தின் தணிக்கை முடிந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். சரியான நாளில் படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடிக்கும். அதுமட்டுமின்றி இன்று மாலை 6 மணிக்கு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.