1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Ranveer singh does not act in sakthimaan movie

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

Cinema
1997 முதல் 2004 வரை மிகவும் பிரபலமாக இருந்த டிவி தொடர் சக்திமான். இந்தியில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் பல இந்திய மொழிகளிலும் வெளியாகி பெரும் புகழ் பெற்றது. அப்போதைய 90ஸ் கிட்ஸ் சக்திமான் காப்பாற்றுவார் என மாடியில் இருந்து குதித்த சம்பவங்களும் ஏராளம்.இந்த தொடரை முகேஷ் கண்ணா தயாரித்து, தானே சக்திமானாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சக்திமான் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளதாக முகேஷ் கண்ணா அறிவித்திருந்தார். ஆனால் கரோனா காரணமாக அந்த படம் தொடங்குவதில் தாமதமானது. சக்திமான் படத்தில் ரண்வீர் சிங் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் முகேஷ் கண்ணா சக்திமான் கதாபாத்திரத்து ரண்வீர் சரியான தேர்வு இல்லை என்று சொல்லியிருந்தார்.

ரண்வீர் சிங் பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததால்தான் முகேஷ் கண்ணா அவரை நிராகரித்தார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் ரண்வீர் தரப்பும் தற்போது சக்திமான் படத்தில் அவர் நடிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளது. இதனால் இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!