செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (16:17 IST)

வேர்ல்டு பேமஸ் லவ்வர்: ஒரே டைம்ல 4 ஹிரோயினை ஓட்டும் யங் விஜய்!

விஜய் தேவர்கொண்டாவின் படத்திற்கு வேர்ல்டு பேமஸ் லவ்வர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 
 
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹிட் அடித்து அதன் பின்னர் நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. 
 
இவருடைய டியர் காம்ரேட் திரைப்படம் சமீபத்தில் 4 மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது அவர் தனது ஒன்பதாவது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகன்னா, கேத்ரின் தெரசா, பிரேஸில் மாடலான இஸபெல் ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிகின்றனர். 
 
கிராந்தி மாதவ் இயக்கத்தில், கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு வேர்ல்டு பேமஸ் லவ்வர் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ரொமான்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாகிறது. 
 
இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று துவங்கியுள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.