இந்தியில் ரீமேக்காகும் "வேட்டை" - தூள் கிளப்ப வரும் சூப்பர் ஹீரோஸ்!

Papiksha| Last Updated: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (15:37 IST)
இந்தியில் மெகா ஹிட் அடித்த பல வெற்றி படங்களை தமிழ் இயக்குனர்கள் ரீமேக் செய்து கோலிவுட்டின் ஸ்டைலை மாற்றி வருவதெல்லாம் வரலாற்றில் பல காலமாக இருப்பது தான். ஆனால் தற்போது கோலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த வெற்றி படங்களை இந்தியில் ரீமேக் செய்து வெற்றி காண்பது தான் இப்போதுள்ள ட்ரெண்ட். 


 
அந்தவகையில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2012 ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் "வேட்டை".  இதில் அண்ணன் , தம்பியாக மாதவன் மற்றும் ஆர்யா நடிக்க அவர்களுக்கு ஜோடியாக  சமீரா ரெட்டி , அமலா பால் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். 


 
டைகர் ஷராஃப் நடிப்பில் வெளியான பாஹி படத்தின்  3-ம் பாகமாக இது உருவாகிறது. அஹ்மத்  இயக்கவுள்ள இப்படத்தில் ஆர்யா கதாபாத்திரத்தில் டைகர் ஷெரிப்பும், மாதவன் கதாபாத்திரத்தில் ரிதேஷ் தேஸ்முக்கும் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இப்படத்தில் முதல் ஹீரோயினாக  ஷ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளார். பாலிவுட்டின் இரண்டு சூப்பர் ஹீரோக்கள் நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :