புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (16:37 IST)

தலைவிக்கு தில்ல பாத்தியா... சயிரா ப்ரமோஷனுக்கு வர மறுத்த நயன்தாரா!

சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நயன்தாராவிடம் கேட்ட அதை அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போது அந்த படத்தின் புரமோஷன் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுவது வழக்கம். 
 
ஆனால் நடிகை நயன்தாராவுக்கு சம்பளமாக கிட்டத்தட்ட 5 கோடி கொடுக்கப்பட்டும் அவர் எந்த படத்திற்கும் புரமோஷன் விழாவுக்கு செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் விஜய் நடித்த பிகில் படத்தில் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி ரஜினியுடன் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் தர்பார் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள அவர் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிகிறது. 
ஆனால், ராம் சரண் தன் தந்தை சிரஞ்சீவியை வைத்து தயாரித்துள்ள சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு நயன்தாராவிடம் கேட்க, அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம். 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு அனாமிகா எனும் தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்ததால் நயன்தாராவுக்கு ஓராண்டு தடை விதித்தது டோலிவுட் என்பது குறிப்பிடத்தக்கது.