மேனர்ஸுடன் பேசுங்க: ஜனனியுடன் மல்லுக்கட்டும் மும்தாஜ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமா ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், ஜனனி ஐயர் குறித்து ரித்விகா புகார் கூறும் காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில், மும்தாஜிற்கும், மகத்திற்கும் சண்டை வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
இந்நிலையில், நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜனனி சாப்பிடும் போது இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று சொன்னால் எனக்கு கோவம் வரும் என்று மும்தாஜிடம் கூறுகிறார். இதற்கு மும்தாஜ் என்னிடம் பேசும் போது மேனர்ஸுடன் பேசுங்க என்று ஜனனியுடன் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.