திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (09:19 IST)

சுவாரஸ்யம் இல்லாத டாஸ்குகள்: விறுவிறுப்பு அடையுமா பிக்பாஸ்?

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரம் ஆகிவிட்டது. ஒரு போட்டியாளர் வெளியேறியும்விட்டார். ஆனால் இன்னும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக மாறவில்லை. அதற்கு மொக்கையான டாஸ்குகளும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. 
 
கடந்த  வார டாஸ்க்கான வேலைக்காரர் - எஜமானர் டாஸ்க் நல்ல டாஸ்க் என்றாலும் அதை போட்டியாளர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. இந்த வாரம் தண்ணீர் தொட்டியில் இருந்து கசியும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என்றும் நீச்சல் குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து தூக்கியெறிந்து அதை இன்னொருவர் பிடித்து வாளியை நிரப்ப வேண்டும் என்று எல்.கே.ஜி குழந்தைகளின் டாஸ்க்கையும் பிக்பாஸ் கொடுத்துள்ளார். இதனால் பார்வையாளர்களுக்கு போரடிப்பதை தவிர்க்க முடியவில்லை.
 
மேலும் மகத்தின் வாய்ஸ் மாடுலேஷன், செயற்கையான கோபம் ஆகியவை எரிச்சல் அடைய வைக்கின்றது. மும்தாஜ், டேனியல், ஜனனி ஆகியோர்கள் மட்டும் கொஞ்சம் மெச்சூரிட்டியாக நடந்து கொள்கின்றனர். பொன்னம்பலம், அனந்து ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பதே புரியவில்லை. ரித்விகா அமைதியின் சொரூபமாக உள்ளார். பாலாஜி, நித்யா சண்டையை நிறுத்திவிட்டு ரொமான்ஸை ஆரம்பித்துவிட்டனர். திடீர் தோழிகளான ஐஸ்வர்யா, யாஷிகா முட்டி மோதிக்கொள்கின்றனர். மொத்தத்தில் இதே ரீதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்பதை பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் ஞாபகம் வைத்து கொள்வது நல்லது