திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (22:16 IST)

யாஷிகாவிடம் கிஸ் கேட்ட மகத் : கடுப்பான மும்தாஜ் (வீடியோ)

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மகத், பெண் போட்டியாளர்களிடம் வழிந்து வழிந்து பேசி வருவதாக நெட்டிசன்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அவர் சிம்பு குரலில் பேசி வெறுப்பேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் யாஷிகாவுக்கு கொக்கி போடுவதும் பலருக்கு பொறாமையாக உள்ளது.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுக்கின்றார். இந்த டாஸ்க்கின்படி இரண்டு கேன்களில் உள்ள தண்ணீர் வெளியேறாமல் கைகளை வைத்தே காப்பாற்ற வேண்டும். 
 
இந்த டாஸ்க்கில் மகத் தனது கைகளை வைத்து தண்ணீரை காப்பாற்றி வரும் நிலையில் யாஷிகா கையை எடுக்க சொல்கிறார். நீ ஒரு கிஸ் கொடுத்தால் கையை எடுத்துவிடுவதாக மகத் கூற அதனை கேட்ட மும்தாஜ் கடுப்பாகி அவரை திட்டுகிறார். இதனால் மும்தாஜூக்கும், மகத்துக்கும் மோதல் வெடிக்கின்றது. ஆனால் வழக்கம்போல் இந்த புரமோ வீடியோவும் நிகழ்ச்சியை பார்க்கும்போது மொக்கையாகிவிடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.