திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (22:15 IST)

பிக்பாஸ் 2: இந்த வார எவிக்சன் பட்டியலில் யார் யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருவது அதன் விதிமுறைகளில் ஒன்று. கடந்த வாரம் மமதி சாரி வெளியேறிய நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர் யார் என்பதற்கான எவிக்சன் பட்டியல் நேற்று தயாரானது
 
இதில் கடந்த வார டாஸ்க்கை சரியாக செய்யாத நித்யா, அனந்து ஆகியோர் ஏற்கனவே இடம்பெற்றிருந்தனர். அதேபோல் டாஸ்க்கை சரியாக செய்த டேனியல் மற்றும் ரித்விகா ஆகியோர்களை எவிக்சன் பட்டியலில் சேர்க்க முடியாது மேலும் இந்த வார தலைவியாக வைஷ்ணவி தேர்வு செய்யப்பட்டிருப்பதால் அவரையும் எவிக்சன் பட்டியலில் சேர்க்க முடியாது.
 
இந்த நிலையில் எவிக்சன் பட்டியலில் பொன்னம்பலம், மும்தாஜ் மற்றும் பாலாஜி ஆகியோர் இணைக்கப்பட்டனர். இவர்களுடன் நித்யா, அனந்து ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 5 பேர் எவிக்சன் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். இதற்கான வாக்குகள் இன்று முதல் பதிவு செய்யப்படுகிறது.
 
நித்யா, பாலாஜி இருவரும் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டால் வீட்டில் சண்டை குறைந்துவிடும் என்பதால் இருவரும் வெளியேற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. மும்தாஜும் வெளியேற வாய்ப்புகள் குறைவு. எனவே இந்த வாரம் அனந்து அல்லது பொன்னம்பலம் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.