1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (19:28 IST)

மும்தாஜூக்கு கமல் கொடுத்த அதிரடி தண்டனை

பிக்பாஸ் வீட்டில் யார் தலைவராக இருந்தாலும் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல்  நானே தலைவர் என்ற பாணியில் கடந்த இரு வாரங்களாக வலம் வருபவர் மும்தாஜ். அவரிடம் ஆதிக்க குணம் அதிகம் இருப்பதாக மற்ற போட்டியாளர்கள் குற்றம் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சமீபத்தில் போட்டியாளர்களிடம் மட்டுமின்றி பிக்பாஸிடமே மோதினார் மும்தாஜ். பிக்பாஸ் தன்னிடம் பேசும்வரை மைக்கை மாட்ட மாட்டேன் என்று கழட்டி வைத்துவிட்டார். 
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் மும்தாஜ் செய்தது அடிப்படை தவறு என்றும் மைக்கை கழட்டக்கூடாது என்பது முக்கிய விதிமுறைகளில் ஒன்று என்று கூறிய கமல், தாங்கள் கூப்பிடும் வரை மைக்கை கழட்டி வைத்துவிட்டு ஒரு ஓரமாக உட்காருங்கள் என்ற தண்டனையை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மும்தாஜ் மைக்கை கழட்டி வைத்துவிட்டு ஒரு ஓரமாக சோகமாக ஒரு மூலையில் அமர்கின்றார். இதன் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என்பதை இன்று இரவு 9 மணிக்கு பார்ப்போம்