செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (15:27 IST)

தரமான சம்பவங்கள் இனிமே தான் இருக்கு... ஸ்வாரஸ்யமடையும் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் ரவுண்டு வந்தாச்சு... இதுவரை ஒரே குடும்பமாக ஒன்னுக்குள் ஒன்னாக இருந்த போட்டியாளர்கள் இனிமே தங்களுக்காக அடித்துக்கொண்டு டைட்டில் கார்டு வெல்ல போட்டிபோடுவார்கள். அந்தவகையில் தற்ப்போது நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் அடுத்த வார எவிக்ஷனில் இருந்து தப்பிக்க இந்த டாஸ்க் கொடுத்துள்ளனர்.

அதில் ஜோடியாக ஜோடியாக சேர்ந்துகொண்டு ஒருவர் பால் குடுவைக்குள் போட்டுவிட்டால் அந்த நபர் ஒரு போட்டியாளரை வெளியேற்றலாம். கடைசிவரை இதில் யார் நின்று ஜெயிக்கிறாரோ அந்த நபருடன் அவரது ஜோடியும் அடுத்த வார எவிக்ஷனில் நாமினேட் செய்யப்படமாட்டார்.

இதில் சுரேஷ் - பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன் - ஆஜித், ஆரி - ஷிவானி , கேபிரில்லா - அனிதா, ரியோ - நிஷா என ஜோடி ஜோடியாக தங்களது விளையாட்டை அதிரடியாக துவங்கியுள்ளனர். எனவே இனி வரும் வாரங்களில் சண்டை , போட்டி என நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும்..