யலே பிக்பாஸ்... எங்க நிஷா அக்காவையே தேம்பி அழவச்சுட்டல..!

Papiksha Joseph| Last Updated: திங்கள், 12 அக்டோபர் 2020 (15:30 IST)

பிக்பாஸ்நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியுள்ள தொடர்ந்து மொக்கையாக போவதாக ஆடியன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த வராத்திலிருந்து தான் பிக்பாஸ் சூடு பிடிக்க போகிறது. இனிமேல் தான் வித விதமான டாஸ்க்களை கொடுத்து போட்டியாளர்கள் அடித்துகொள்ளப்போகிறார்கள்.

எனவே இதுவரை யாரெல்லாம் மாஸ்க் போட்டு தன் முகத்தை மூடிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அத்தனை பேரின் உண்மை முகமும் இந்த வாரத்தில் பார்க்கமுடியும். இன்றே ரியோவிற்கும், சுரேஷிற்கும் சண்டை ஆரம்பித்துவிட்டது. இனி எல்லாமே இப்படிதான்...

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோ ஒரு அழகான உணர்வை கொடுத்துள்ளது. ஆம், இன்று பிறந்தநாள் கொணடாடும் நிஷா அக்காவிற்கு பிக்பாஸ் செம சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி அவரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திவிட்டனர். நிஷா தன்னுடைய ஒரு வயது குழந்தையை பார்த்ததும் கலங்கி அழுத்துவிட்டார்.
உண்மையாக சொல்லப்போனால் பிக்பாஸ் வீட்டில் மறைக்காத முகத்தை வெளிப்படுத்துவது நிஷா மட்டும் தான். எப்பவும் எல்லாரையும் காமெடி பண்ணிட்டு கலாய்க்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


இதில் மேலும் படிக்கவும் :