சனம் ஷெட்டியை துரத்திவிட்டு பிக்பாஸ் வீட்டில் நுழையும் அர்ச்சனா?

Papiksha Joseph| Last Updated: திங்கள், 12 அக்டோபர் 2020 (15:54 IST)

பிக்பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷனில் சனம் ஷெட்டி மற்றும் ஷிவானி இருவரது பெயரும் முதலில் இருக்கிறது. இதில் உள்ளே இருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் சனம் ஷெட்டியை தான் நாமினேட் செய்துள்ளனர். அத்தோடு, மக்களும் அவரை வெளியேற்றவே விரும்புகின்றனர்.

இப்படியான நிலையில் தற்ப்போது பிக்பாஸ் வீட்டில் புது போட்டியாளர் நுழைய உள்ளார். அது வேறு யாருமில்லை தொகுப்பாளினி அர்ச்சனா தான். இவர் ஜீ தமிழ் ஆங்கர் என்பதால் விஜய் டிவி தொகுத்து வழங்கும் பிக்பாஸில் பங்கேற்றமுடியாது என முன்னதாக பேச்சுக்கள் அடிபட்டது.

ஆனால், தற்ப்போது தீவிர பிளான் போட்டு அது சக்ஸஸ் ஆகிவிட அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டில் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே சனம் ஷெட்டி எவிக்ஷனில் வெளியேறியதும் அர்ச்சனாவின் ஆட்டம் அதிரடியாக இருக்கப்போகிறது. அர்ச்சனா வந்துவிட்டால் பிக்பாஸ் வீடே கலகலப்பாகிவிடும்.


இதில் மேலும் படிக்கவும் :