மொட்டை மாமாவை உண்டு இல்லனு செய்த வேல்முருகன் - ரணகளமான பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே சக போட்டியாளர்களை வம்பிழுத்து கோபப்படுத்தி வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஷிவானி , அனிதா சம்பத் , ரியோ உள்ளிட்டோரை தொடர்ந்து தற்ப்போது வேல்முருகனுக்கும் சுரேஷுக்கு சண்டை வலுத்துள்ளது.
பிக்பாஸ் வீடே ஒன்று கூடி வேடிக்கை பார்க்கும் அளவிற்கு இருவரும் பக்கத்துக்கு வீட்டுக்காரன் சண்டை போல அடித்துக்கொள்கின்றனர். வேல்முருகன் கேட்காமலே வேஷ்டி கொடுத்துவிட்டு பின்னர் அவரை தரக்குறைவாக பேசி அசிங்கப்படுத்தியுள்ளார் சுரேஷ். இதனால் அவமானத்திற்கு உள்ளான வேல்முருகன் நான் உங்க கிட்ட கேட்டேன் என நடு வீட்டில் நிக்க வச்சு வெளுத்து வாங்கிவிட்டார்.
ஆனாலும், சூடு சுரணை இல்லாத மொட்டை மாமா கூலாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே, பரட்டை பத்தவச்சுட்டியே பரட்ட என டார்கெட் செய்து யாரையோ கூறுகிறார். அது யார் என்பது எபிசோட் பார்க்கும்போது தான் தெரியும். சனம் ஷெட்டி, ஷிவானியை விட முதலில் இந்த சுரேஷ் சக்கரவர்த்தியை தூக்கி வெளியில் போடவேண்டும். இவரு ஒரு ஆம்பள வனிதா போல நடந்துகொள்கிறார் என மக்களும் அவர் மீது வெறுப்பை காட்டி வருகின்றனர்.