புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (13:40 IST)

இரு கதையும் ஒன்றுதான் ; ஆனால் முருகதாஸ் திருடவில்லை : பாக்யராஜ் பேட்டி

செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒரே மாதிரி இருந்ததுதான் பிரச்சனை என இயக்குனரும், சினிமா எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

 
சில நாட்களாக நீடித்து வந்த சர்கார் பட கதை பிரச்சனை இன்று நீதிமன்றத்தில் முடிவிற்கு வந்தது. கதையின் டைட்டில் கார்டில் வருணா ராஜேந்திரன் பெயரை போடுவதாக முருகதாஸ் கூறிவிட்டார்.
 
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாக்யராஜ் “சர்கார் கதையின் கருவும், செங்கோல் கதையின் கருவும் ஒன்றாக இருந்தது. அதனால்தான் ஊடகங்களில் இரு கதையும் ஒன்று என தெரிவித்தேன். 

 
சிவாஜி கணேசனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டதை கருவாக வைத்து முருகதாஸ் சில மாதங்கள் உழைத்து இந்த கதையை உருவாக்கியுள்ளார். அதேபோல், செங்கோல் கதையை 10 வருடங்களுக்கு முன்பே வருண் ராஜேந்திரன் உருவாக்கியுள்ளார். இரு கதைகளின் போக்கும் ஒரே மாதிரி இருந்தது. எனவே, வெளியே தெரியாமல் முடிக்கலாம் என நினைத்தேன். ஆனால், முருகதாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. 
 
எனவே, உங்களைப் போல் அவரும் வளர வேண்டிய இயக்குனர். எனவே, அங்கீகாரம் கொடுங்கள் என மீண்டும் முருகதாஸை வலியுறுத்தினேன். அவரும் அதை பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டார். எனவே, இப்பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது. இரு கதையும் ஒன்றுதான். ஆனால், முருகதாஸ் திருடி எடுக்கவில்லை” என தெரிவித்தார்.