புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (12:29 IST)

ஆமாம்... சர்கார் கதை ராஜேந்திரனுடையது –ஒப்புக்கொண்ட முருகதாஸ்

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த சர்கார் கதைதிருட்டு விவகாரத்தில் வருண் ராஜேந்திரனும் இயக்குனர் முருகதாஸும் சமசரம் செய்துகொண்டுள்ளனர்.

சர்கார் டீஸர் ரிலீஸானதும் இந்த கதை என்னுடைய கதை என்று திரைப்பட உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அது சம்மந்தமாக திரை எழுத்தாளர்கள் சங்கத்திலும் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட சங்கத்தலைவர் கே பாக்யராஜ் இரண்டு கதைகளையும் படித்துப் பார்த்து இரண்டு கதைகளும் ஒன்றே என அறிவித்தார். வருணுக்கு ஆதரவாக சங்கத்தின் சார்பில் கடிதம் ஒன்றையும் அளித்தார்.

இது சம்மந்தமான வழக்கு விசாரணை இன்று நீதிபதி சுந்தர் முன்னிலையில் நடக்க இருந்தது. அதில் திடீர் திருப்பமாக இயக்குனர் முருகதாஸ் தரப்பில் இருந்து ராஜேந்திரனோடு சமாதானம் செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கதை ராஜேந்திரனுடையதுதான் என ஒப்புக்கொண்டதாகவும், படத்தின் தொடக்கத்தில் கதை நன்றி என்ற பிரிவில் வருண் ராஜேந்திரன் பெயர் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வருண் தன்க்கு சன்மானமாக 30 லட்சம் ரூபாய் கோரியிருந்தார். அந்த தொகையும் அவருக்கு இழப்பீடாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கை முடித்துவைத்து நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.