சர்கார் பஞ்சாயத்து ஓவர் - பெருமூச்சு விட்ட முருகதாஸ்
சர்கார் பட விவகாரத்தில் தனக்கும், வழக்கு தொடர்ந்த அருண் என்பவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
சர்கார் கதை தன்னுடைய ‘செங்கோல்’ கதை என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த தமிழ் திரை எழுத்தாளர்கள் சங்கம் சர்கார் கதையும் வருணின் செங்கோல் கதையும் ஒன்றுதான் எனக் கூறியுள்ளது.
ஆனால், இதனை இயக்குனர் முருகதாஸ் மறுத்துள்ளார். இருவருக்கும் ஒரே சிந்தனை இருந்திருக்கலாம். ஆனால், காப்பி இல்லை. நான் நீதிமன்றத்தில் சாந்தித்துக்கொள்கிறேன் என பாக்யராஜிடம் கூறிவிட்டார். அதேபோல், சர்கார் கதையை திருடி உருவாக்கவில்லை. இரவு பகலாக கஷ்டப்பட்டு திரைக்கதையை உருவாக்கினோம் என எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா ஜெயமோகனும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் வருண் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைய நேரில் காண பாக்யராஜ் மற்றும் முருகதாஸ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது, சர்கார் விவகாரத்தில் சமசரம் ஏற்பட்டு விட்டதாக முருகதாஸ் மற்றும் பட தயாரிப்பு நிறுவனமும் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இன்று விசாரணை நடைபெற்ற போது மனுதாரர் அருணின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.. எனவே, தற்போதைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்படும் எனத் தெரிகிறது.