சர்கார் விவகாரம் ; விஜய் என்ன சொன்னார் தெரியுமா? : பாக்யராஜ் பேட்டி
சர்கார் பட விவகாரம் குறித்து விஜய் என்ன சொன்னார் என்பது பற்றி இயக்குனர் பாக்யராஜ் பேட்டி அளித்துள்ளார்.
சர்கார் கதை தன்னுடைய ‘செங்கோல்’ கதை என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த தமிழ் திரை எழுத்தாளர்கள் சங்கம் சர்கார் கதையும் வருணின் செங்கோல் கதையும் ஒன்றுதான் எனக் கூறியுள்ளது.
ஆனால், இதனை இயக்குனர் முருகதாஸ் மறுத்துள்ளார். இருவருக்கும் ஒரே சிந்தனை இருந்திருக்கலாம். ஆனால், காப்பி இல்லை. நான் நீதிமன்றத்தில் சாந்தித்துக்கொள்கிறேன் என பாக்யராஜிடம் கூறிவிட்டார். அதேபோல், சர்கார் கதையை திருடி உருவாக்கவில்லை. இரவு பகலாக கஷ்டப்பட்டு திரைக்கதையை உருவாக்கினோம் என எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா ஜெயமோகனும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரம் பற்றி நடிகர் விஜய் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கமால் வழக்கம் போல் அமைதி காத்து வருகிறார்.
இந்நிலையில், பாக்யராஜ் அளித்த பேட்டி ஒன்றில் “இதுபற்றி விஜயிடம் பேசினேன். எனக்கு மிகவும் தர்ம சங்கடமாக இருக்கிறது”எனக்கூறினேன். இது கேட்டு விஜய் “ சார் நீங்கள் தர்ம சங்கடமாக ஃபீல் பண்ன வேண்டாம். முருகதாஸ் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறிவிட்டார். விட்டு விடுங்கள். உங்கள் தரப்பில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் எனக் கூறினார். யாருக்கு ஆதரவாகவும் அவர் பேசவில்லை” என பாக்யராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.