என்ன சொல்கிறார் 40 நாள் கதையெழுதிய ஜெயமோகன்?
சர்கார் கதை விவகாரத்தில் இரு தரப்பும் சமாதானாமாகி உள்ள நிலையில் கதை திருட்டு சம்மந்தமாக கருத்து தெரிவித்த எழுத்தாளர் தற்போது என்ன கருத்து சொல்லப்போகிறார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது சம்மந்தமாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது.
கதைத் திருட்டு சம்மந்தமாக அவர் கூறியதாவது ‘இந்த கதைத்திருட்டு போன்ற செய்திகளை நாம் நம்ப விரும்புகிறோம், ஏனென்றால் இந்தச் செய்திகளிலேயே ஒரு வணிகசினிமா டெம்ப்ளேட் உள்ளது. ஏழைX பணக்காரன், எளியவன்X வென்றவன் என்ற முடிச்சு. ’அடாடா ஏழை அசிஸ்டெண்ட் டைரக்டரோட கதைய சுட்டுட்டாண்டா” .நாம் எங்கே அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளது அதில். உண்மையில் இந்த ஒருவரியையே விஜய்யை வைத்து படமாக ஆக்கலாம். அதே டெம்ப்ளேட்டில்’ எனக் கூறியுள்ளார்.
இப்போது இயக்குனர் முருகதாஸே கதை தன்னுடையது அல்ல. ராஜேந்திரனுடையதுதான் என ஒப்புக்கொண்டதாகவும் அதனால் படத்தின் தொடக்கத்தில் வருண் ராஜேந்திரனின் பெயர் கதை நன்றி என்ற இடத்தில் போடப்படும் மேலும் அவர் கேட்ட சன்மானமான 30 லட்சம் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
அதனால் இப்போது ஏ ஆர் முருகதாஸுக்கு ஆதரவாக அறிக்கை விட்ட ஜெயமோகன் இது குறித்து என்ன சொல்லப்போகிறார் என சமூக வலைதளங்களில் உள்ள உதவி இயக்குனர்கள் ’40 நாள் ரூம் போட்டு கதையெழுதியது உண்மையென்றால் ஏன் கோர்ட்டில் சரண்டர் ஆனார் உங்கள் இயக்குனர்?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.